ஹிக்கடுவையில் திராணகம பிரதேசத்தில் இன்று (31) காலை 9.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இதில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காகச் சென்ற இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
