இலங்கையில் ஒருவரின் இறுதிக் கிரியையின் போது பட்டாசு வெடித்து மகிழ்ச்சியடைந்த மக்கள்!

0
232

அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் அதிகாரியின் கழுத்தை கைவிலங்கினால் நெரிக்க முயற்சித்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் அவரது இறுதிக்கிரியைகள் நேற்றைய தினம் (18-10-2023) பிற்பகல் இடம்பெற்றிருந்தன.

குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்த 22 வயதான கே.ஏ.மகேஷ் தனஞ்சய என்பவரே இவ்வாறு பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இலங்கையில் ஒருவரின் இறுதிக்கிரியையின் போது பட்டாசு வெடித்து மகிழ்ச்சியடைந்த மக்கள்! | Colombo People Enjoy Firecrackers During Funeral

இவருடைய இறுதிக்கிரியைகளின் போது, அவிசாவளை நகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கிட்டத்தட்ட 2 மணித்தியாலம் பட்டாசுகள் வெடித்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தல்துவ சந்தி, அவிசாவளை நகரம், மணியங்கம, கலாபலன கந்த, அட்பந்திய உள்ளிட்ட பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணி முதல் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியடைந்ததாக அவிசாவளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.