ஒவ்வொரு வாரமும் திரையில் புது புது படங்கள் வெளியாகிறது. இந்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், அதை குறிவைத்து பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவர உள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
டங்கி
ஷாருக்கான் நடித்த டங்கி திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஷாருக்கானுடன் பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சலார்
பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் பிரபாஸ், தற்போது கே.ஜி.எஃப் படங்கள் மூலம் இந்தியளவில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார் Part 1 – Ceasefire திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிற டிசம்பர் 22ம் திகதி திரைக்கு வரவுள்ளது.

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது
இயக்குநர் ரமேஷ் வெங்கட் இயக்கத்தில் ராமதாஸ், யாஷிகா ஆனந்த், ஹரிஜா, ரித்விகா மற்றும் பலர் நடித்துள்ள நகைச்சுவை திரைப்படம் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அடிக்கடி பயன்படுத்தும் இந்த வசனத்தை இயக்குநர் படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளார்.
இப்படத்தினை தயாரிப்பாளர் சத்யமூர்த்தி தயாரிக்க, இசையமைப்பாளர் கௌஷிக் க்ரிஷ் இசையமைத்துள்ளனர். அத்திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.

அரணம்
மஸ்காரா போட்டு மயக்குறியே, மக்காயலா மக்காயலா போன்ற ஹிட் பாடல்களை எழுதிய பாடலாசிரியர் ப்ரியன் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள படம் அரணம்.
ஹாரர், கிரைம், திரில்லர் படமான அரணம் படத்தை தமிழ்த்திரைக்கூடம் திரைப்பட நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக வர்ஷா நடிக்க, ராட்டினம், எட்டுத்திக்கும் மதயானை, சத்ரு போன்றோர் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 22ம் திகதி வெளியாக உள்ளது.

அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம்
டிசி யுனிவர்ஸின் ‘அக்வாமேன்’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம்’ ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் எதிர்பார்ப்போடு நாளை உலகம் முழுவதும் தியேட்டரில் வெளியாக உள்ளது.
இதில் ஜாசன் மோமா, யஹ்யா அப்துல் மதீன், நிக்கோல் கிட்மேன், பாட்ரிக் வில்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
