பொலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முதல் ரித்திக் ரோஷன் வரை பல பிரபலங்களுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளது. இந்த பதிவில் ஜோதிடத்தினை நம்பும் சில பொலிவுட் பிரபலங்களை பார்க்கலாம்.
நடிகர் அமிதாப் பச்சன்
பொலிவுட் நடிகரான அமிதாப் பச்சனுக்கு எண் ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை இருக்கிறது. அதனால் ஜோதிடரை கலந்து கொள்ளாமல் வெளியீட்டு திகதியை இது வரை அவர் முடிவு செய்வதே இல்லை.
அவர் தற்போது ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

நடிகர் ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கானுக்கு எண்கள் மீது நம்பிக்கை உள்ளது. சில குறிப்பிட்ட எண்கள் தான் தனக்கு ராசி என நம்புவதால் முக்கியமான விடயங்கள் செய்யும் போது தனக்கு ராசியான எண்ணில் தான் தொடங்குவார்.

நடிகர் ரன்பிர் கபூர்
சந்தீப் வாங்கா ரெட்டி இயக்கத்தில் வெளியான அனிமல் படத்தின் நாயகன் ரன்பிர் கபூருக்கு எண்கள் மீது நம்பிக்கை உள்ளது. அவரும் எண் ஜோதிடத்தினை முழுமையாக நம்புகின்றார்.

தீபிகா படுகோன்
பொலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் தீபிகா படுகோன் தனக்கு 5ம் எண் ராசி என நினைக்கிறார். அந்த எண்ணால் தனக்கு பல நல்ல விஷயங்கள் நடப்பதாக நம்புகிறார்.

நடிகர் ரித்திக் ரோஷன்
நடிகர் ரித்திக் ரோஷனுக்கு எண்கள் மீது அதீத நம்பிக்கை உண்டு. அதனால் ஏதாவது முக்கியமான விஷயம் செய்யும் முன்பு ஜோதிடரிடம் நிச்சயம் அறிவுரை கேட்பாராம்.

ப்ரியங்கா சோப்ரா
கோலிவுட்டில் தன் கெரியரை துவங்கிய ப்ரியங்கா சோப்ரா பொலிவுட்டின் முன்னணி நடிகையானார். தற்போது ஹொலிவுட்டில் அசத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு ராசிக்கற்கள் மீது நம்பிக்கை.
