கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழா இன்று (13.06.2023) இடம்பெறுகின்றது.
கடந்த 3 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்த திருவிழா தொடர்ந்து 9 நாட்கள் நவநாள் விசேட திருப்பலிகள் ஒப்புக் கொடுக்கப்பட்டு இன்றையதினம் சிறப்பு திருவிழா திருப்பலிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இன்றையதினம் காலை, தமிழ் மொழியில் திருப்பலிகள் ஒப்புக் கொடுக்கப்பட்டதுடன் தற்போது சிங்கள மொழியிலும் பின்னர் ஆங்கில மொழியிலும் திருப்பலிகள் ஒப்புக் கொடுக்கப்படும்.
இந்த திருவிழாவில் பங்கேற்க கொழும்பின் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
https://www.facebook.com/watch/?v=995930874748780