கஜேந்திரகுமாரின் வீட்டின் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு கண்டனம்

0
277

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இனவாதத்தை வேண்டுமென்றே தூண்டுகிற முயற்சிகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லத்துக்கு முன்பாக நேற்றும், நேற்றுமுன்தினமும் பௌத்த தேரர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

“வடக்கில் சிங்கள மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காக கொழும்பில் வசிக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் முன்பாக போராட்டங்களை மேற்கொள்ள இருக்கிறோம்“ என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்திருந்த பின்புலத்திலேயே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.