போராட்டத்தில் தந்தை சிலை சேதம்; நீதி கோரும் பங்களாதேஷ் முன்னாள் பிரதமர்!

0
86

பங்களாதேஷில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் நடாத்திய போராட்டத்தை அடுத்து வேறு வழியின்றி அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினர்.

இந்த நிலையில் ஷேக் ஹசீனா இந்தியா வந்த பிறகு முதன்முறையாக பங்களாதேசம் வன்முறை தொடப்ரில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஷேக் ஹசீனா பங்களாதேச வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். பங்களாதேசத்தின் தேசிய தந்தையான எனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலையை சேதப்படுத்தியதற்கு நீதி வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.