இரண்டு பிள்ளைகளின் தந்தை அடித்து கொலை!

0
576
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

நொச்சியாகமயாய பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர்  அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக தந்தையும் மகனும் இணைந்து இந்தக் கொலையைச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய அத்தே என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இக்கொலையைச் செய்த இரண்டு சந்தேக நபர்களும் ராஜாங்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.