அப்பா மைனா, சித்தப்பா காகம் எப்படி மகன் சிங்கம்? – எஸ்.எம். மரிக்கார்

0
243

தந்தை மைனாவாகவும் சித்தப்பா காகமாகவும் மாறிய நிலையில் மகன் மாத்திரம் எப்படி சிங்கமாகலாம் என்ற கேள்வி தனக்கிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாமல் ராஜபக்ச உட்பட மொட்டுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது தேர்தலை நடத்துமாறு கூறி மேடைகளில் சத்தமிடுகின்றனர்.

தேர்தல் ஒன்று தேவை என்றால் மேடைகளில் ஏறி சத்தமிடாது ஜனாதிபதியை சந்தித்து தேர்தலை கோருங்கள்.

நாமல் ராஜபக்ச தற்போது சிங்கமாகியுள்ளார். தந்தை மைனாவாகவும் சித்தப்பா காகமாகவும் இருக்கும் போது மகன் மாத்திரம் எப்படி சிங்கமாக முடியும்.

கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் இருந்த காலத்தில் எரிபொருளை நிரப்ப எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் இருக்கவில்லை.

தற்போது எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் இருக்கின்றது. எரிபொருளை நிரப்ப மக்களின் கையில் பணமில்லை.

ராஜபக்சவினர் காலத்தை விட தற்போதைய அரசாங்கம் பெருமளவில் கொள்ளையடிப்பில் ஈடுபட்டுள்ளது எனவும் மரிக்கார் கூறியுள்ளார்.