மகளுக்கு உணவு வாங்க வீட்டைவிட்டு வந்த தந்தை பலி – உக்ரைனில் தொடரும் சோகம்

0
503

உக்ரைனில் மகளுக்காக பாண் வாங்க வீட்டை விட்டு வெளியே வந்த தந்தை ரஷ்யாவின் ஷெல் தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கார்க்கிவ் நகரத்தில் திங்கட்கிழமையன்று, Victor Gubarev எனும் 79 வயது நபர், தனது மகள் Yana Bachek-வுக்காக பாண் வாங்க வீட்டை விட்டு தனியாக வெளியே சென்றிருக்கிறார்.

அப்போது சில மணிநேரங்கள் ஆகியும் அவர் விடு திரும்பாததால், யானா வெளியே வந்து பார்த்திருக்கின்றார் . அப்போது ஒரு இடத்தில் கூட்டமாகவும், அருகில் அவசர ஊர்தியும் நின்றுகொண்டிருந்தது.

யானா  பயத்துடன் அருகில் சென்று பார்க்கும் போது, Victor Gubarev கையில் தனக்காக வாங்கிவந்த பாணுடன் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். 

இந்நிலையில் அவர் தனது தந்தையை பார்த்து கதறி அழுத புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. அவர்கள் இருக்கும் இடத்திற்கு  அருகில் ரஷ்யர்கள் ஷெல் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். 

அந்த ஷெல்லின் ஒரு பாகம் சிதறி விக்டர் மீது பாய்ந்து அவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.