காத்தான்குடியில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

0
498

காத்தான்குடியில் 15 வயது சிறுமியான தனது மகளை துஷ்பிரயோகத்திற்கு ஈடுபடுத்தியுள்ளதாக கூறப்படும் 44 வயதுடைய சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் நேற்று சனிக்கிழமை (03-09-2022) சந்தேகத்தில் தந்தையை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடியில் 15 வயது சிறுமிக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம்! | Tragedy Of Father To Daughter

சம்பவ தினமான நேற்று 15 வயதுடைய மகளை வீட்டில் வைத்து அவரது தந்தை துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந் நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி 1921 சிறுவர் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலும் சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலை படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.