கண்டியில் கோர விபத்து: சம்பவ இடத்திலேயே யுவதி பலி

0
109

கண்டி – மினிப்பே பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளுடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் யுவதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவமானது நேற்று (13.03.2024) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பூஜாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய மேரி கனிஷ்டா என்ற யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசாரணை
தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் மேற்படி யுவதி வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வீதியில் எதிரே வந்த முச்சக்கரவண்டி மோதியுள்ளது.

இந்தக் கோர விபத்தில் யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளது.

அத்துடன் முச்சக்கரவண்டி சாரதியும், அதில் பயணித்த இரண்டு பெண்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.