தளபதியை மலர்தூவி வரவேற்ற ரசிகர்கள்: ரசிகர்களுக்கு முத்தங்களை பறக்கவிட்ட தளபதி

0
270

கட்சி தொடங்கியதை உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததன் பின்னர் முதல் முதலாக நடிகர் விஜய், ரசிகர்களைச் சந்தித்துள்ளார். ‘கோட்’ திரைப்படத்தின் படிப்பிடிப்புக்காக ஏஎஃப்டி மில் வளாகத்துக்கு விஜய் வந்துள்ளதை அறிந்த ரசிகர்கள் ஏஎஃடி மில் முன்னிலையில் குவிந்துள்ளனர்.

சிறிது நேரத்தின் பின்னர் வேன் ஒன்றின் மீது ஏறிய விஜய் தமது ரசிகர்களைப் பார்த்து கையசைத்துள்ளார். விஜய்யை பார்த்த ரசிகர்கள் கூச்சலிட்டு, மலர்மாலைகளை அவரை நோக்கி வீசத் தொடங்கினர்.

பின்னர் தமக்கு வீசப்பட்ட மலர் மாலைகளை எடுத்து ரசிகர்களை நோக்கி வீசிய விஜய், முத்தங்களையும் பறக்கவிட்டார். பின் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட விஜய் மீண்டும் படப்படிப்புக்கு திரும்பினார்.

Oruvan

இந்நிலையில், நேரம் செல்லச் செல்ல ரசிகர்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியுள்ளது. போதியளவு காவல்துறையினரும் இல்லாததால் புதுச்சேரி கடலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகி, வாகனங்கள் அந்த பாதையில் செல்ல முடியாமல் திரும்பிச் செல்ல வேண்டிவந்துள்ளது.