கொழும்பில் பிரபல பாடகர் ஹரிஹரனுக்கு அதிர்ச்சி கொடுத்த ரசிகர்கள்…

0
237

பிரபல தென்னிந்திய சினிமா பாடகர் ஹரிஹரன் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில் கொழும்புவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பாடகர் ஹரிஹரன் , ‘காதல் ரோஜாவே’ பாடலை இந்தியில் பாடினார்.

இதனையடுத்து அவர் இந்தியில் அப்பாடலை பாட கேட்டுக்கொண்டிருந்த ரசிகர்கள் சட்டென கோரஸாக தமிழில் ‘காதல் ரோஜாவே’ பாடலை பாடி பரவசப்படுத்தியுள்ளனர்.  

பாடகர் ஹரிஹரன்  தமிழில் மட்டுமல்லாது  பல்வேறுமொழிகளிலும்   சினிமா பாடகளை பாடியுள்ளார்.  90  ஆம் ஆண்டுகளில்  இவரது பாடல்கள்   பெரும் பிரபலமானவை என்பதுடன் இன்றளவும் இவர் பாடிய பல பாடல்கள் மக்கள் மனங்களில்  இடம்பிடித்துள்ளது.