பிரபல தமிழ் நடிகை தீபா தூக்கிட்டு தற்கொலை!

0
796

தமிழ் சினிமாவில் வாய்தா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை தீபா என்கிற பவுலின்(29).

இவர், நடிகர் விஷாலின் படமான துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார். இதனிடையே இவர் சென்னை விருகம்பாக்கத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர்கள் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

தீபா தற்கொலை செய்வதற்கு முன்பாக கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில், தான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன் என்றும் ஆனால் தன் காதல் கைக்கூடவில்லை என்பதால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்வதாகவும் தன் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியுள்ளார்.