யாழில் இடம்பெறவுள்ள பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி!

0
245

யாழ் – முற்றவெளி அரங்கில் நொதேண் யுனியின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி எதிர்வரும் (21.12.2023) ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இவ்விடயம் தொடர்பான ஊடக சந்திப்பு இன்று (11.10.2023) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.

ஊடக சந்திப்பில் தென்னிந்தியாவின் பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சி தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளார்.

நுழைவுச்சீட்டு விபரம் 

இவ் இசை நிகழ்ச்சியானது முற்றிலும் இலவசமாக நடாத்தப்படவுள்ளது.

யாழில் இடம்பெறவுள்ள பிரபல தென்னிந்திய பாடகரின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி! | The Musical Show Will Held In Jaffna

இதற்கான நுழைவு சீட்டுகள் எதிர்வரும் நாட்களில் வழங்கப்படும் என ஏற்பாடு குழு தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு சிறந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்வாகவும் Magic group இன் யாழ் வருகையை பிரபல்யப்படுத்தும் நோக்கோடு பாடகரும் இசையமைப்பாளருமான ஹரிகரன் தலைமையிலான இசை நிகழ்ச்சி ஒன்றினை நொதேன் யுனி யாழ்ப்பாணத்தில் வழங்க உள்ளது எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.