குழந்தை பெற்ற 17 வயது பெற்றோருக்கு விளக்கமறியல்

0
24

ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்ட குழந்தையின் தாய்- தந்தை இருவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு புதன்கிழமை (1) அன்று அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குழந்தையை பிரசவித்து அதனை அநாதரவாக கைவிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நிந்தவூர் தாய் மற்றும் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார்.

17 வயதுடைய குறித்த பெற்றோர்கள் திருமணத்துக்கு அப்பாலான உறவின் மூலம் மீட்கப்பட்ட பெண் குழந்தையை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) அன்று பெற்றெடுத்திருந்தனர்.

குழந்தையின் தந்தை மற்றும் தாய் உள்ளிட்டோரை கைது செய்த பொலிஸார் அவர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இருவரையும் ஒக்டோபர் மாதம் 03 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தற்போது குறித்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் குழந்தையின் தாயும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதை அடுத்து குழந்தையின் பெற்றோரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.