ஈராக்கில் வெடித்த வன்முறையால் பரபரப்பு!

0
496

ஈராக்கில் வன்முறைப் போராட்டங்கள் வெடித்ததையடுத்து நாடு தழுவிய அளவில் ஊரடங்கு உத்தரவை ராணுவம் பிறப்பித்தது.

ஈராக் பிரதமராக முகமது அல்-சூடானி அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஷியா பிரிவு தலைவரான அல்-சதருடைய ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தும், வளாகத்தை முற்றுகையிட்டும் அவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் ஆளும்கட்சி மற்றும் சதாரின் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் 20 பேர் காயம் அடைந்தனர்.