முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட எம்.பிக்கள் பாஸ்போர்ட் இரத்து; பங்களாதேஷ் அதிரடி நடவடிக்கை

0
144

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட்டை இரத்து செய்வதாக பங்களாதேஷ் இடைக்கால அரசு அதிரடியாக அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பங்களாதேசில் மாணவர்கள் இட ஒதுக்கீடு உத்தரவை எதிர்த்து செய்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் பிரதமர் பதவியை இராஜினாமா ஷேக் ஹசீனா ரத்து செய்திருந்தார்.

அதோடு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் விரைவில் இங்கிலாந்துக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பங்களாதேசில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, ஷேக் ஹசீனாவின் அனைத்து நாடுகளின் பாஸ்போர்ட்களை இரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதுமட்டுமின்றி முன்னாள் எம்பிக்கள் அனைவரது பாஸ்போர்ட்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் அடைகலம் புகுந்துள்ள ஷேக் ஹசீனா வேறு நாட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.