ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட பிரதம அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் டபிள்யூ. பி.ஏகநாயக்க காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் டபிள்யூ. பி.ஏகநாயக்க தனது வீட்டின் குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். 1948 மார்ச் 19ஆம் திகதி பிறந்த இவர் மரணிக்கும் போது 76 வயதாகும். டபிள்யூ.பி.ஏக்கநாயக்க நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
அதேவேளை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த அமைச்சருக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்கிக் கொண்டிருந்த ஒருவர், சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சென்ற நிலையில் முன்னாள் அமைச்சர் ஏக்கநாயக்க மட்டுமே வீட்டில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் இறுதியாக கடந்த 2015 இல் ஐ.தே.க. கட்சி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்ததோடு, 2006 – 2015 காலப் பகுதியில் பல்வேறு பிரதியமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- நீர்ப்பாசனம் மற்றும் நீர் வள முகாமைத்துவ பிரதி அமைச்சர் (2010.11.22 – 2015.01.08)
- அனர்த்த முகாமைத்துவு பிரதி அமைச்சர் (2010.04.23 – 2010.11.22)
- நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் (2009.12.18 – 2010.04.09)
- நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் (2007.01.28 – 2009.12.16)
- நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் (2006.07.28 – 2007.01.27) (தகவல்: பாராளுமன்றம்)