பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு, வைரக் கிரீடம் மற்றும் தங்க வாளை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 80 லட்சத்துக்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது. இசை ஞானம் எனக்கு மூகாம்பிகை அம்மன் அளித்த வரம்.
இசை மட்டுமின்றி இந்த வாழ்க்கையில் நான் பெற்ற அனைத்தும் அம்மன் எனக்கு அளித்த பரிசே இளையராஜா என கூறினார். மூகாம்பிகை அம்மனை தான் கடந்த 50 ஆண்டுகளாக வழிபட்டு வருவதாக இளையராஜா தெரிவித்தார்.

அவர் இசையமைத்த பல பாடல்கள், அம்மனின் அருளால் உருவாகியவை என்றும், ஒவ்வொரு முறையும் இசையமைக்க அமரும்போது, அம்மன் தனக்குத் துணையாக இருப்பதாக உணருவதாகவும் கூறினார்.
இந்த வைர கிரீடமும், தங்க வாளும், தான் அம்மனுக்குச் செலுத்தும் நன்றி என்றும் அவர் குறிப்பிட்டார். இசையமைப்பாளர் இளையராஜாவின் இந்த காணிக்கை, மூகாம்பிகை கோவிலின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.