இலங்கை ஆணை திருமணம் செய்த எத்தியோப்பிய பெண்; கணவன் செய்த செயல்.. பெண் கைது!

0
327

இலங்கையில் ஆண்ணொருவரை திருமணம் செய்து கொண்டு விசா இன்றி தந்தையுடன் தங்கியிருந்த எத்தியோப்பிய பெண், கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி சுற்றுலாத்துறை பொலிஸாரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இலங்கையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து அம்பிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார்.

பொலிஸ் விசாரணை

இந்நிலையில் , மனைவி மீண்டும் தன்னைவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிடுவாரோ என அஞ்சிய கணவர் , பெண்ணின் கடவுச்சீட்டு மற்றும் ஏனைய ஆவணங்களை மறைத்து வைத்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேவேளை குறித்த ஏற்கனவே திருமணமானவர் என்றும், எத்தியோப்பியாவில் இருந்து தனது இரண்டு குழந்தைகளுடன் நாட்டிற்கு வந்துள்ளமையும் விசாரணகளில் தெரியவந்துள்ளது.

பெண்னின் அவரது விசா ஜனவரி 17 ஆம் திகதி காலாவதியானதாக தெரிவிக்கப்படும் நிலையில், , சம்பவம் குறித்து கண்டி சுற்றுலாப் பொலிஸ் பிரிவு இந்தியாவிலுள்ள எத்தியோப்பிய தூதரகத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.