எலோன் மஸ்க்கின் நடத்தையை விமர்சித்த ஊழியர்கள் பணி நீக்கம்!

0
663

எலான் மஸ்க்கின் (Elon Musk) நடத்தையை வெளிப்படையாகக் கடிதம் மூலம் விமர்சித்த ஊழியர்களை SpaceX நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

இணைய வெளியில் பகிரப்பட்ட பகிரங்க கடிதத்தால் சில ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

எலான் மஸ்கின் (Elon Musk) நடத்தை ஊழியர்களை எப்படி சங்கடப்படுத்துகிறது என்பது பற்றி அந்த கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை என்பதுடன் எத்தனை ஊழியர்கள் நீக்கப்பட்டனர் என்ற தகவலும் தெரிவிக்கப்படவில்லை.