மரண தண்டனையிலிருந்து எமில் ரஞ்சன் விடுதலை

0
111

மரண தண்டனையிலிருந்து முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவை விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல்நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகளினால் வழங்கப்பட்ட மரண தண்டனையிலிருந்து விடுவிக்க உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (08) உத்தரவிட்டுள்ளது.

தண்டனைக்கு எதிராக முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதலில் கைதிகளை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாகக் காணப்பட்ட எமில் ரஞ்சனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.