எலான் மஸ்க் மகனின் விசித்திரப் பெயர்; என்ன தெரியுமா?

0
237

உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் (Elon Musk) தமக்கும் முன்னாள் காதலி கிரைம்ஸுக்கும் (Grimes) மூன்றாவது பிள்ளை பிறந்திருப்பதாக உறுதி செய்திருக்கிறார்.

அதாவது எலான் மஸ்க் மகனின் பெயர் ‘Tau Techno Mechanicus’. அது குறித்து எலான் மஸ்க் X தளத்தில் பதிவிட்டிருந்தார். X சமூக ஊடகத்தின் நிறுவனர் எலான் மஸ்க்கிற்கும் முன்னாள் காதலி கிரைம்ஸுக்கும் மொத்தம் 3 பிள்ளைகள்.

Tau Techno Mechanicus - elon musk baby name

அதேவேளை அவர்களது மூன்று வயது மகன் ‘X’ என்றும் 1 வயது மகள் ‘Y’ என்றும் அழைக்கப்படுகின்ற நிலையில் மூன்றாவது குழந்தைக்கு ‘Tau Techno Mechanicus விசித்திரமான பெயரை சூட்டியுள்ளனர்.

52 வயதான எலான் மஸ்க் SpaceX, Tesla ஆகிய நிறுவனங்களின் உரிமையாளராவார் என்பதுடன் இவருக்கு மொத்தம் 11 பிள்ளைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.