ஜனாதிபதி தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தினார் திலித் ஜயவீர

0
116

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான சர்வஜன சக்தி (Sarvajana Balaya) கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக திலித் ஜயவீரவுக்கு (Dilith Jayaweera) கட்டுப்பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.

திலித் ஜயவீர சார்பில் கலாநிதி ஜீ.வீரசிங்க (Dr. G. Weerasinghe) இன்று (13) கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தலைமையிலான தொழிற்சங்கத்தின் குழுவினர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

ஓகஸ்ட் 04 ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற கூட்டமைப்பின் மாநாட்டின் போது ‘சர்வஜன சக்தி’ கட்சியின் செயற்குழு உறுப்பினர் எம்.பி விமல் வீரவன்ச (Wimal Weerawansa) திலித் ஜயவீரவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் போட்யிட கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.