யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியை முடக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பு சந்திவெளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.