ஈழத்து குயில் கில்மிஷா பாடும் ப்ரோமோ வெளியாகி 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. பிரபல தொலைக்காட்சியில் சரிகமப நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து 3வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.
இந்த வாரம் கில்மிஷாவின் பாடல் ப்ரொமோவாக வெளியாகியுள்ளது. இதனை கேட்ட நடுவர்கள் பிரமித்து போனதுடன், கண்டிப்பாக கில்மிஷா பைனல் செல்ல உள்ளதாக கூறியுள்ளனர்.
கடந்த நாட்களில் கில்மிஷா பாடிய பாடல் அரங்கத்தையே கண்கலங்க வைத்திருந்தது. தனது பாடல் வரிகளில் ஈழப்போரில் காணாமல் போன தாய்மாமனின் ஏக்கத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.
மேலும், இலங்கை சிறுமி அசானியும் உத்தியோகபூர்வமாக நிகழ்ச்சிக்கு இந்த வாரம் உள்வாங்கப்பட்டுள்ளார். இரண்டு இலங்கை போட்டியாளர்கள் இந்தியாவில் நடக்கும் சரிகமப மேடையை அதிர வைத்து வருகின்றனர். இதனால் நிகழ்ச்சி மீதான எதிர்ப்பார்ப்பு இலங்கையர்களுக்கு அதிகரித்து வருகின்றது.