ராஜபக்ஷக்களின் கழிவறைகளை கழுவியவரே ஈஸ்டர் தாக்குதலை திட்டமிட்டுள்ளார் – சரத் பொன்சேகா

0
242

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான செனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தில் வெளியிட்டப்பட்ட தகவல்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவது அவசியமாகும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுக்கள் இந்த நோக்கங்களை நிறைவேற்றாது. சர்வதேச விசாரணையை நடத்த அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கான ஏற்பாடுகளை சுரேஷ் சாலியே செய்துள்ளார் என நம்புகிறேன்.

அவர் ராஜபக்ஷக்களின் கழிவறைகளை கழுவியவர். அவரே 2019 ஆம் ஆண்டு குண்டுத் தாக்குதல்களுகடகு பொறுப்பாக இருக்கக் கூடும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் வலியுறுத்தியிருந்தார்.

அதேபோன்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், உடனடியாக சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்பை அரசாங்கம் வழங்க வேண்டுமெனவும் ஈஸ்டர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனவும் நேற்றைய தினம் கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.