ஈஸ்டர் தாக்குதல்; நட்டஈட்டை வழங்கிய நிலந்த ஜயவர்தன

0
221

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகத் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் 75 மில்லியன் ரூபா நட்டஈட்டினை வழங்கியுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு அண்மையில் விடுத்த அறிவித்தலின் பிரகாரம் நிலந்த ஜயவர்தன இன்று (07) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

இதன்போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை முன்கூட்டியே புலனாய்வுத் தகவல் கிடைத்தும் தடுக்கத் தவறியமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை பூர்த்தி செய்யாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இழப்பீடு வழங்கியதை உறுதி செய்யும் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவித்து மதியம் 1.30 மணி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.