நேபாளத்தில் பூகம்பம் டெல்லி வரை அதிர்வு!

0
261

நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட பூகம்பம் டெல்லி வரை மிகக் கடுமையான அளவுக்கு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பூகம்பம் ரிச்சடர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகள், கட்டடங்களில் உள்ள பொருள் அனைத்தும் அதிர்ந்துள்ளதோடு பெரும்பாலானவர்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நேபாளத்தில் பூகம்பம் டெல்லி வரை அதிர்வு | Earthquake In Nepal Reverberates To Delhi

நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட நில அதிர்வானது நேபாள எல்லையில் உள்ள உ.பி., உத்தரகண்ட் மாநிலத்தின் சில பகுதிகளிலும் டில்லியின் சுற்று வட்டார பகுதிகளிலும் உணரப்பட்டது.

டில்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அடுத்தடுத்து 2 முறை நில அதிர்வு உணரப்பட்டது. இது வலிமையானதாக இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் வீடுகளில் இருந்த மின் விளக்குகள், மின் விசிறிகள் உள்ளிட்டவை குலுங்கின.

இதனால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை இல்லை. எனினும் நில அதிர்வு காரணமாக மக்கள் மத்தியில் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.