எரிபொருள் பற்றாக்குறையால், மாடுகளை பயன்படுத்தி பெரும்போகம் ஆரம்பிப்பு

0
397

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோகப் பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு நிலத்தைப் பண்படுத்துவதற்குரிய எரிபொருள் வழங்கப்படாமையினால் மாடுகளைப் பயன்படுத்தி வயலைப் பண்படுத்தி பெரும்போகத்தை ஆரம்பித்துள்ளோம் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளின் கவலை

அத்தோடு முன்னையகாலம் போன்று அனைத்து விவசாயிகளும் இயந்திரத்தை நம்பாமல் வீட் டுக்கு ஒரு சோடி மாடுகளை வளர்த்தால் மட்டுமே தற்போது விவசாயம் மேற்கொள்ள முடியும். எனினும் இந்த நிலை எமக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

எரிபொருள் இன்மையால் மாடுகளைப் பயன்படுத்தி பெரும்போகம் ஆரம்பிப்பு | Due To Lack Of Fuel Cattle Became Popular

எனவே இவற்றைக் கருத்திற் கொண்டு உரிய நேரத்தில் பெரும்போக செய்கையை மேற்கொள்வதற்குத் தேவையான எரிபொருள் மற்றும் யூரியா உரம் ஆகியவற்றை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு விவசாயிகள் உதவமுடியும். அவ்வாறில்லாமல் இந்த நிலை தொடருமாயின் ஒருவேளை உணவுக்கே வழியின்றிப் போய்விடும் அபாயம் ஏற்படும் என்று கூறியுள்ளனர்.