சிறையில் வீட்டு உணவுக்கு ஏங்கும் டக்ளஸ் தேவானந்தா

0
26

முன்னாள் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்களும் தற்போது மஹர சிறைச்சாலை மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்களின் குடும்பத்தினர் வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து வழங்குவதாக சிறை அதிகாரிகளிடம் விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாளிலிருந்து மஹர சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு வழங்கப்படும் வழக்கமான உணவைப் பெற்று வருகிறதாக கூறப்படுகின்றது.

அதேவேளை நாடாளும்ன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரை காண மஹர சிறைச்சாலை மருத்துவமனைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.