இரட்டைக் கொலைச் சம்பவ சந்தேகநபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

0
157
Shooting a gun in night

ஹொரண, மொரகஹாஹேன, மாலோஸ் சந்தியில்  நேற்று (07) இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர் இன்று (08) அதிகாலை பாதுக்க – அங்கமுவ பிரதேசத்தில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சுட்டு கொல்லப்பட்ட நபர் 33 வயதுடையவர் எனவும், இலங்கை விமானப்படையின் இரத்மலானை முகாமில் கடமையாற்றும் கோப்ரல் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் கார் பாதுக்கை நோக்கி  சென்றதை பொலிஸார் கண்டுபிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.