தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. தொகுப்பாளினியாக இருந்து சிறு வாய்ப்பு மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகியாக மம்முட்டி படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
ஐயா, சந்திரமுகி
அதன்பின் கோலிவுட்டில் ஐயா, சந்திரமுகி போன்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி கோடியில் சம்பளம் வாங்கும் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து காதல் சர்ச்சையில் சிக்கி, தோல்வியும்கண்டார். அதன்பின் சில காலம் பிரேக் எடுத்து ராஜா ராணி படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கிளாமரில் கலக்கி இந்த உயரத்தை தொட்டிருக்கிறார் நடிகை நயன் தாரா. இயக்குனர் ஹரி ஐயா படத்திற்காக குடும்ப பாங்கான இளம் நடிகையை தேடியிருக்கிறார். அப்போது நயன் தாரா மலையாள படத்தில் மூன்று படங்களில் நடித்தப்பின் தான் தமிழில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.
அசிங்கப்படுத்திய இயக்குனர்
அப்போது இயக்குனர் பார்த்திபன் இயக்கும் குடைக்குள் மழை படத்தின் ஆடிஷனில் நயன் தாராவும் கலந்து கொண்டிருக்கிறார். ஆடிஷனில் நயன் தாராவை பார்த்துவிட்டு அவரது உதவியாளரிடம் 20 வயதானாலும் வயதானவர் போன்ற தோற்றம் இருப்பதால் வேண்டாம் என்று கூறி அவமானப்படுத்தியிருக்கிறார்.
அதன்பின் அந்த உதவியாளர் நயன் தாராவிடம் ஹரி படத்தின் ஆடிஷன் பற்றி கூற நயன்தாரா அங்கு சென்றிருக்கிறார். அப்படத்தில் தாவணி பாவடையில் சிறுமி ரோலில் நடிக்க ஆரம்பித்த வாய்ப்பு தான் இந்த இடத்திற்கு நயன்தாரா வர காரணமாக அமைந்திருக்கிறது.