தமிழர்களின் வீடுகளையும் சொத்துக்களையும் எரித்து 30 வருட யுத்தத்திற்கு வழி வகுத்தவரும் 60000 இளைஞர்களை கொன்று குவித்தவரும் தனது தந்தை என்பதனை சஜித் பிரேமதாச மறந்துவிடக்கூடாது என அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தந்தையில் செயல்களை மறைந்து அடக்குமுறைகளைப் பற்றி பிரேமதாச மகனான சஜித் பிரேமதாச அதிகமாகவே பேசுவதாகவும் அவர்குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதை விட மோசமான நிலமை எதிர்காலத்தில் வரும்
அத்துடன் எதற்கெடுத்தாலும் ராஜபக்ச குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டும் எதிர்க்கட்சியினர் , உக்ரைன் யுத்தத்தால் இதைவிட மோசமான பொருளாதார நிலைமையை எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அப்போதும் அதற்கும் ராஜபக்சர்கள் மீது தான் பழிபோடுவார்கள் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.