உயர்தர / சாதாரணதரப் பரீட்சைகள் இடம்பெறும் காலத்தில் வினா, விடைத்தாள்களைச் சேகரித்து வைக்கும் மத்திய நிலையங்களிற்குப் பரீட்சை முடியும் வரை முழுமையான காவல்துறைக் கண்காணிப்பு வழங்கப்படுவது வழமையாகும்.
அவ்வாறான பரீட்சை மத்திய நிலைய வளாகங்களிற்குள் / அருகில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலுமே அனுமதியின்றி உட்பிரவேசிக்க / கூட்டம் கூட்ட முடியாது. (வினாத்தாள்களை மோசடி செய்ய முயன்றார்கள் என்ற கோணத்திலே பார்க்க முடியுமாக இருக்கும்)
அதோடு பரீட்சை ஆரம்பித்த நாள் முதல் முடியும் நாள்வரை “இது பரீட்சை நிலையம்” என்ற சுவரொட்டி வாயிலில் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும்.
கஜேந்திரகுமார் கவனக்குறைவாக இருந்தாரா? மாட்டிக்கொண்டார்களா?

இவ்வாறான நிலையில் London இல் சட்டம் படித்த, மூன்றாம் தலைமுறைச் சட்டத்தரணியான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கவனக்குறைவாக இருந்தாரா அல்லது வாக்கு அரசியல் காரணங்களுக்காய் publicity stunt செய்யப்போய் மாட்டிக்கொண்டார்களா என்பது புரியவில்லை.
அன்றைய தினம் பரீட்சை நிலையக் காவல் கடமையில் நின்ற பொலீசாரோடு முரண்பட்ட கட்சியின் உறுப்பினர்கள் சிலர் பிணை வழங்கப்பட முடியாத சட்ட ஏற்பாடுகளின் துணையுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமது ஆதரவாளர்களின் நலனில் அக்கறையற்ற, முட்டாள்தனமான தலைவர்களின் அரசியலுக்காய் ஆதரவாளர்கள் பலிக்கடாவாக வேண்டாமே என முகநூலில் நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.