நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா போல் நடித்து, பாடசாலைப் பொருட்களுக்கு நன்கொடை கோரி ஒரு கும்பல் மக்களை ஏமாற்றத் தொடங்கியுள்ளதாக கலாநிதி டி சில்வா இன்று தெரிவித்தார்.
“என் பெயரைப் பயன்படுத்தி ஒரு திருட்டு கும்பல் பாடசாலைப் பொருட்களுக்கு நன்கொடைகள் கேட்டுள்ளது. நான் CID உடன் தொடர்பில் இருக்கிறேன். அவர்கள் டுபாயிலுள்ள முக்கிய குற்றவாளியைக் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள். தயவுசெய்து அவர்களால் ஏமாறாதீர்கள் என ஹர்ஷ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.