மருத்துவர் அருச்சுனாவும் தேர்தலில் குதிப்பு; யாழில் கட்டுப்பணம் செலுத்தினார்!

0
123

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக போட்டியிட Dr. அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை நண்பகலுடன் நிறைவடைகின்றது.

அதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசலை விவகாரம் தொடர்பில் மருத்துவர் அருச்சுனா அக்டோபர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மருத்துவர் அருச்சுனா நேற்றையதினம் (9) பிணையில் வெளிவந்திருந்த நிலையில் இன்று கட்டுபணம்  செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.