ஆசியாவிலேயே எழுத்தறிவு அதிகம் உள்ள கிராமம் இந்தியாவில்தான் உள்ளது. எது தெரியுமா?
தோரா மாஃபி என்ற இந்த கிராமம் உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ளது. அலிகார் பூட்டுத் தொழில்களுக்கும் புகழ்பெற்ற அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்திற்கும் பிரபலமானது.
2002-ஆம் ஆண்டில், இந்த கிராமம் ஆசியாவிலேயே அதிக கல்வியறிவு பெற்ற கிராமமாக ‘லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்’ பட்டியலிடப்பட்டது.
இந்த கிராமம் பல விஞ்ஞானிகள், பொறியாளர்கள், பேராசிரியர்கள், டாக்டர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை நாட்டிற்கு பரிசளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 75 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
24 மணி நேர மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி, ஆங்கில வழி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ள நாட்டின் மிகவும் வளர்ந்த கிராமங்களில் தோரா மாஃபியும் ஒன்றாகும்.
இந்த கிராமத்தின் மக்கள் தொகை சுமார் பத்தாயிரம் முதல் பதினொன்றாயிரம் வரை 80 சதவீதம் குடும்பங்களில் குறைந்தபட்சம் ஒரு அதிகாரியாவது பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசுத் துறைகளில் பணியமர்த்தப்படுவதால், கிராமத்தில் அதிக அரசு ஊழியர்கள் உள்ளனர்.
இந்த கிராமம் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ளது, இது கிராமவாசிகளின் உயர் கல்விக்கு உதவுகிறது. இக்கிராம மக்கள் விவசாயத்தை தவிர்த்து கல்வியை நம்பி வாழ்கின்றனர்.
கிராமத் தலைவர் டாக்டர் நூருல் அமீனின் கூற்றுப்படி, கிராமத்தின் சிறந்த விஷயங்களில் ஒன்று மக்களிடையே சகோதரத்துவமும் ஒற்றுமையும் ஆகும். பல்வேறு சமூகங்கள் மற்றும் பிரிவைச் சேர்ந்தவர்கள் இங்கு பல ஆண்டுகளாக பாகுபாடின்றி ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர் என கூறியுள்ளார்.