ஸ்பெயினில் அமைந்துள்ள கிரனாடா எனும் பகுதி குகைகளின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள சாக்ரோமாண்டே மற்றும் குவாடிக்ஸ் குகைகள் 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவையாகும். இங்குள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாறைகளில் இருந்து எடுக்கப்பட்ட கல்லில் செய்யப்பட்டுள்ளன.
பண்டைய காலத்தில் முதலில் மிருகங்களால் வேட்டையாடப்படுவதை தவிர்க்கும் நோக்கில் பாறைகள் பயன்படுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து, மதம் மற்றும் இனப்பிரச்சினைகளிருந்து தப்பிப்பதற்காக மக்கள் இந்த குகைகளை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது சாதாரண வாழ்க்கை்கு குறித்த பகுதியில் உள்ள குகைகளை மக்கள் வீடுகளாக பயன்படுத்துகின்றனர்.
