என்னை என்னவேணாலும் பண்ணுங்க… அவங்கமேல கைவைக்காதிங்க.. தவெக தலைவர் விஜய் காணொளி!

0
19

தமிழகத்தில் கரூரின் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் சம்பவத்திற்கு அரசியல் பிரமுகர்கள் உடபட பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் இன்னும் அங்கு செல்லவில்லை என கூறப்படுகின்றது.

இந்நிலையில் பதற்றத்தை தணிக்கவே தான் அங்கு செல்லவில்லை என தவெக தலைவர் விஜய் தற்போது காணொளி வெளியிட்டுள்ளார். தமிழக முதலமைச்சரே என்னை என்னை என்னவேணாலும் பண்ணுங்க… அவங்கமேல கைவைக்காதிங்க என உருக்கமாக கூறியுள்ளார்.

அதோடு இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த துயரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். “என் வாழ்க்கையில் இது போன்ற சூழ்நிலையை சந்தித்ததில்லை. நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. மனது முழுக்க வலி எனத் தெரிவித்துள்ளார்.