வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் பேரணிகளில் மக்கள் கவர்ந்து இழுப்பதற்காக, போத்தல்களில் அடைக்கப்பட்ட தரம் குறைந்த ’கள்’ இலவசமாக வழங்கப்படுவதாக முறைப்பாடுகள் பல கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு இவ்வாறு தரமற்ற ’கள்’ வழங்கப்படுவதால், அவர்கள் வேலைக்குச் செல்வதில் இடையூறு ஏற்படுவதுடன், அவர்களின் வினைத்திறனும் குறைந்துள்ளதாக தோட்ட முகாமையாளர்கள் மற்றும் தோட்ட நிர்வாக அதிகாரிகள் முறைப்பாடு செய்வதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் , ’கள்’ விநியோகத்தில் ஏற்படும் தேர்தல் சட்ட மீறல்களை தடுக்க பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மஞ்சுள கஜநாயக்க வலியுறுத்தியுள்ளார்.