திஸ்ஸ அத்தநாயக்கவினால் வெளியிடப்பட்ட வெறுக்கத்தக்க அறிக்கை: 100 கோடி நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல்

0
60

தேசிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கொழும்பு மாவட்ட நீதிமன்றில் நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்தார்.

தேசிய மக்கள் சக்தி கட்சி ஆட்சி அமைத்தவுடன் கண்டியில் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹரவை நிறுத்துவதாக தான் கருத்து தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவின் வெறுக்கத்தக்க இழிவான அறிக்கையினால் அரசியல்வாதி என்ற வகையில் தாம் கட்டிக்காத்து வரும் நற்பெயருக்கும் புகழுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

100 கோடி ரூபா நட்டஈடு கோரி தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தாக்கல் செய்த இந்த மனுவில் ஐக்கிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.