தென்னிலங்கை மக்களுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வழங்கிய வித்தியாசமான பரிசுப் பொருட்கள்

0
323

தென்னிலங்கையின் அல்பிட்டிய பிடிகல பிரதேசத்தில் கிறிஸ்மஸ் தாத்தா வித்தியாசமான பரிசு பொருட்களை வழங்கியுள்ளார். வழமையாக நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறுவர்களுக்கு கிறிஸ்மஸ் தாத்தா பரிசு வழங்கப்படும்.

எனினும் இம்முறை நத்தார் பண்டிகையின் போது கிறிஸ்மஸ் தாத்தா போன்ற ஆடையணிந்த ஒருவர் வீடுகளுக்குச் சென்று வெங்காயம் மற்றும் முட்டை என்பனவற்றை பரிசாக வழங்கியுள்ளார்.

இலங்கை மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதனால் இவ்வாறு முட்டை மற்றும் வெங்காயத்தை மக்களுக்கு வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். விலை அதிகம் என்பதனால் தம்மால் அதிகளவில் இவற்றை விநியோகம் செய்ய முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தென்னிலங்கை மக்களுக்கு கிறிஸ்மஸ் தாத்தா வழங்கிய பரிசுப் பொருட்கள் | Gift Items Given By Santa Claus To Southern People