பராக் ஒபாமா இலங்கைக்கு இரகசியமாக வந்தாரா?: சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட புகைப்படம்!

0
290

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதாக குறிப்பிட்டு புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இவ்வாறு பகிரப்படும் புகைப்படத்தின் பின்னணி இலங்கை சூழலை ஒத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

”பரக் ஒபாமா இலங்கைக்கு வந்து போனது யாருக்கும் தெரியாது” என்ற குறிப்புடன் அவர் வீதிக்கு அருகில் உள்ள இளநீர் கடையில் இளநீர் அருந்தும் புகைப்படம் ஒன்றே இவ்வாறு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா இலங்கைக்கு விஜயம் செய்ததாக இலங்கை அரசாங்கம் எந்தவித அறிவிப்பும் விடுத்திருக்காத பின்னணியில் இந்த புகைப்படத்தின் உண்மைத் தன்மையை Fact seeker வெளிப்படுத்தியுள்ளது.

Oruvan

இதன்படி ஒபாமாவின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தள கணக்குகளை Fact seeker ஆராய்ந்த போதிலும் அவரது சமூக வலைத்தள கணக்குகளில் அத்தகைய புகைப்படங்களோ பதிவுகளோ பதிவிட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பகிரப்படும் குறித்த புகைப்படங்களை google reverse image search மூலம் ஆராய்ந்துபார்த்த போது ​​பரக் ஒபாமா கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் விடுமுறையை கழிப்பதற்காக சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை என்பதை உறுதிப்படுத்த முடிந்ததாக Fact seeker தெரிவித்துள்ளது.

அத்துடன் 2017ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்கள் மற்றும் ஒபாமாவின் உத்தியோகபூர்வ சமூக ஊடக கணக்குகளில் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி பரக் ஒபாமா இலங்கைக்கு இரகசியமாக வந்ததாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவுகள் இன்மைக்குப் புறம்பானது என Fact seeker உறுதிப்படுத்தியுள்ளது.