சிங்கள பாடலை டிங்கரிங் செய்தாரா அனிருத்?: தேவரா பாடலுக்கு எழுந்த சர்ச்சை

0
72

தேவரா படத்தின் இரண்டாவது பாடலை இலங்கையில் உருவான மனிகே மஹே என்ற ஆல்பம் பாடலிலிருந்து இசையமைப்பாளர் அனிருத் உருவாக்கியிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அனிருத்தின் இசையில் தேவரா படம் உருவாகியிருக்கிறது. அதில் ஜூனியர் என்.டிஆர் – ஜான்வி கபூர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அந்தப் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் நேற்று முன்தினம் வெளியானது.

ஆனால் அந்தப் பாடல் இப்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. அதாவது பொதுவாகவே அனிருத் வேறு பாடல் ட்யூனை எடுத்து டிங்கரிங் செய்து புது பாடலை உருவாக்குவார் என்று குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருக்கிறது.

இப்போது வெளியாகியிருக்கும் செகண்ட் சிங்கிளையும் இலங்கையில் உருவான மனிகே மஹே என்ற ஆல்பம் பாடலிலிருந்துதான் உருவாக்கியிருக்கிறார் என்று அந்தப் பாடலையும், இந்தப் பாடலையும் கம்ப்பேர் செய்து நெட்டிசன்ஸ் சமூக வலைதளங்களில் பேசிவருகின்றனர்.