டயானாவின் வழக்கு விசாரணை; நீதிமன்றம் உத்தரவு!

0
304

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் கடவுச்சீட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி இன்று (02) தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் போது இருதரப்பு சட்டத்தரணிகளுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ​​டயானா கமகேவின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த ஜனாதிபதியின் சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க உள்ளிட்ட சட்டத்தரணிகளுக்கு இடையில் ஏற்பட்ட காரசாரமான வார்த்தைப் பிரயோகங்களை அடுத்து நீதவான் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.