விண்வெளியில் பூமியைத் தாண்டி பல்லாயிரக் கணக்கான கிரகங்களும் உள்ளன. அந்த வகையில் நமக்கு மிகவும் அருகில் இருக்கும் ஒரு கிரகத்தில் பல மில்லியன் தொன் அளவிலான வைரம் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
சூரியக் குடும்பத்தின் புதன் கிரகம் கறுப்பு கிரகம் என்று அழைக்கப்படுகிறது. இக்கிரகம் கறுப்பாக இருப்பதற்கு காரணம் இதிலிருக்கும் க்ராஃபைட் தான் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
புதன் கிரகத்தின் மேற்பரப்பில் கார்பன், சிலிக்கா, இரும்புக் கலவை ஆகியவை இருப்பதோடு, இவை சூரியனுக்கு மிகவும் அருகாமையில் இருப்பதால் அவை உருகிய வடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.