துருவ நட்சத்திரம் படத்திற்கு தணிக்கை குழு வழங்கிய U.A சான்றிதல்

0
223

துருவ நட்சத்திரம் படத்திற்கு தணிக்கை குழு யு.ஏ சான்றிதல் வழங்கியுள்ளது. 2015ம் ஆண்டு இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் துவங்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது.

வெளியீட்டு பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகின்றது. அண்மையில் தணிக்கை செய்யப்பட்டு இந்த படத்தின் நீளம் 2 மணிநேரம் 25 நிமிடம் மற்றும் 12 நொடிகள் என்று அறிவிக்கப்பட்டது.

அதே போலெ இந்த படத்தின் தணிக்கை சான்றிதழும் தற்போது வெளியாகியுள்ளது. தணிக்கை குழு யு.ஏ சான்றிதல் வழங்கிய நிலையில் கெட்டவார்த்தை மட்டும் சரியாக 18 இடங்களில் வெட்டப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் இன்னும் சில வார்த்தைகள் மற்றும் கட்சிகளுக்கு தணிக்கை குழு கத்திரி போட்டுள்ளது. நவம்பர் மாதம் 24ம் தேதி உலக அளவில் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.